திருநங்கைகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருநங்கைகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

 பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநங்கைகளின் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. 
        இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருநங்கைகளின் அத்தியாவசிய தேவைகள் என்ன என்பதை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். மேலும் அவர்கள் தங்களுக்கு வசிக்க குடியிருப்பு வேண்டும் என்றும் தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தமிழ் இலக்கியங்களில் மனிதசமூகத்தைப் பற்றி மிக விரிவாகப் பற்பல கருத்தியல் கோட்பாடுகளில் பேசப்பட்டுள்ளன. அவைகள் எந்தெந்த வகைகளில் பேசப்பட்டாலும் மானுடம் உயிர்பெற்று தெளிந்த ஞானத்தோடும் தெளிந்த அறிவோடும் புகழ்பெற்று சிறப்பாக வாழவேண்டும் எனும் நோக்கத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களாகும். இலக்கியங்களில் ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரையில் இயல்பாகவே இடம்பெற்று இருக்கும் வகையில் அதன் சூழல்கள், காலநிலைகள், இடங்கள் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரையில் மானுடச்சமூகத்தின் ஆண்பால், பெண்பால் உணர்வுகளை மிகுதியாக எடுத்துக்கூறி வந்தபோதிலும் ஆண்பாலாக இருந்து பெண்பாலாக மாற்றமடைந்த திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றியும் சில இடங்களில் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இப்படி இலக்கியங்களில் உள்ள பட்சத்தில் திருநங்கை கோரிக்கையை ஏற்று அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்கிறோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதி அளித்தார்.

      இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் நீதிராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.