வாணியம்பாடி மது அமலாக்க பிரிவு போலீசார் 50 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர் ...

வாணியம்பாடி மது அமலாக்க பிரிவு போலீசார் 50 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர் ...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதி ஒட்டியுள்ள மாதகடப்பா பகுதியில் வாணியம்பாடி மது அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .

அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயத்தை லாரி டியூப் மூலமாக இருசக்கர வாகனத்தில் இருவர் கடத்தி வந்துள்ளனர் போலீசாரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டு தப்பி ஓடி உள்ளனர் அப்போது துரத்திச் சென்ற போலீசார் பாபு என்பவரை மட்டும் பிடித்தனர் மற்றொருவர் தப்பி ஓடிய நிலையில் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் .

விசாரணையில் மாதகடப்பா பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன்  பாபு (வயது 24) என்பது தெரிய வந்தன கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதி நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் 

இதேபோல் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியில் கள்ளச் சாராயம் விற்று வந்த பார்வதி (வயது 63) என்பவர் கைது அவரிடமிருந்து 15 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அவரை மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.