93 வயதில் உழைக்கும் தன்னம்பிக்கை பெரியவர் மகனை போல வந்து கெளரவப்படுத்தி உதவிய நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்...
93 வயதில் உழைக்கும் தன்னம்பிக்கை பெரியவர்
மகனை போல வந்து கெளரவப்படுத்தி உதவிய ., நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்...
60 வயது ஆனாலே.. முதியவர் இல்லத்தில் சேர்ந்து விடலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில்... 93 வயதிலும் ஒரு வேளை உணவுக்காக யாரிடமும் கையேந்தாமல்... தன்னம்பிக்கையோடு உழைத்து.. உழைப்பின் பெருமையை உலகிற்க்கு சொல்லி.. தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து வருகிறார் நெல்லை மாவட்டம் தென்கலத்தை சேர்ந்த 93 வயது முதியவர் அப்துல்ஹனிபா..
தன் வீட்டிலிருந்து புறப்பட்டு .. மெல்ல சைக்கிள் மிதித்து.. மாலை 4 மணிக்கு மகாராஜநகர் உழவர் சந்தையை எட்டும் இவர்.. தளர்ந்த போனது உடல் மட்டும் தான்.. என் தன்னம்பிக்கை அல்ல.. என சீருடைக்கு மாறுகிறார்,
இரவு முழுவதும் காய்கறிகள் வந்து இறங்குவதை கவனித்து வருகிறார்.. காலை 4 மணி முதல் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைவித்த காய்கறிகளை
உழவர் சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் பதிவேட்டில் கையெழுத்து வாங்குகிறார்.. தாமதமாக வருபவர்களிடம் அன்புடன் கடிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறார், இதை ஒரு நாள் கூட ஒய்வு இல்லாமல் சரியான நேரத்திற்கு செய்து வருகிறார்,
இந்தியா சிமெண்ட்ஸ்..ல் 1950 முதல் 22 ஆண்டுகள் பணியாற்றி, நெடுஞ்சாலை துறையில் 9 வருடங்கள், தாமிரபரணி காலனியில் 3 வருடங்கள், மருத்துவமனையில் 2 வருடங்கள் என பல இடங்களில் காவலாளியாக பணியாற்றி, இறுதியாக 2000 ஆண்டு முதல் இன்று வரை 20 ஆண்டுகளாக உழவர் சந்தையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்,
மனைவி ஹஜீரால் பீவி 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.. ஒரு மகள் , ஒரு மகன் (மனநிலை சரியில்லாதவர்) ..பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக இந்த வயதில் வாழ வேண்டியவர்.. உழவர் சந்தையே தனது வீடாகவும், அங்கு வரும் விவசாயிகளை தனது பிள்ளைகளாகவும் நினைத்து வாழ்ந்து வருகிறார்,
தான் சம்பாதித்த பணத்தில் மகளை கட்டி கொடுத்ததாகவும்.. மகனுக்கு வைத்திய செலவு பார்த்ததாகவும். இப்போது யார் துணையும் இல்லாமல் தவிப்பதாக கண் கலங்குகிறார்,
அரசு உதவி தொகையும், உழவர் சந்தை காவலாளி சம்பளமும் கொண்டு தனியே வாழுவதாகவும்.. தனக்கு சிறு கடன் உள்ளதாகவும், தான் இறக்கும் முன்பு அந்த கடனையும் அடைத்து விட்டு , தன் இறுதி செலவிற்கும் பணம் சேர்க்க வேண்டும்.. இதுவே என் கனவு என தெரிவிக்கிறார்.
உழைப்பின் மகிமையை..பெருமையை மேன்மைபடுத்திய இவரை நம் காவலர் வாய்ஸ் இதழ் சார்பாகவும், தன்னார்வலர்கள் சார்பாகவும் புதிய ஆடைகள் , அத்தியாவசிய பொருட்கள் , மற்றும் சிறு நிதியுதவியும் இன்று தை பொங்கல் திருநாள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது,
இவரை பற்றிய விபரங்களை கேட்டறிந்த மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் அவர்கள் இன்று நேரில் வந்து கெளரவிப்பதற்காக வருகை தந்தார்,
94 வயதில் பாரமரிக்க யாரும் இல்லாத நிலையிலும்.. ஒரு வேளை உணவிற்கு கையேந்தாமல் உழவர் சந்தையில் காவலாளியாக வேலை பார்த்த 94 வயது முதியவர் குறித்து காவலர் வாய்ஸ் செய்தி மூலம் அறிந்த நெல்லை காவல் துணை ஆணையர் தை திருநாள் பொங்கல் இன்று சொந்த மகனை போல வந்து அனைத்து உதவிகளையும் வழங்கி அனைவரையும் நெகிழ வைத்தார்.
திருநெல்வேலி மத்திய கூட்டுறவு சங்க தலைவரும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா சிறப்பு விருந்தினராக வருகை தந்து 10,000 வழங்கி பாராட்டினார்.
செந்தூர் கண்சல்டன்ட் இயக்குநர் தன்னார்வலர்
V. T. ராஜன் 10,000,
வழங்கினார்
காவலர் வாய்ஸ் சார்பாக புத்தாடைகள், போர்வை , துண்டு மற்றும் அத்தியாவசிய பொருட்களும், .40 ஆண்டு கால காவலாளி சேவையை பாராட்டி டார்ச் லைட் ஒன்றும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புத்தாடைகள், அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த வயதில் நடிக்கிறாரே என்று70 வயது நடிகனை கண்டு ஆச்சர்யபடும் நாம்.. மற்றொரு நடிகர் தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவினார் என பெருமையடையும் நாம்.. இந்த வயதிலும் நம் உழைப்பே நம்மை காப்பாற்றும் என்று நமக்கு உணர்த்தி வாழும் இந்த நிஜ ஹீரோவை நினைத்து பெருமையடைவோம்..
93 வயது பெரியவர் அப்துல் ஹனிபா வை காவலர் வாய்ஸ் வாழ்த்துவதில் பெருமையடைகிறது.


Comments (0)
Facebook Comments (0)