அம்பத்தூர் துணை ஆணையாளர் தீபா சத்யன்IPS தலைமையில் 9 வீடுகளில் தொடர்ச்சியாக திருடிய நபர் கைது...
சென்னை, கோவூர், தண்டலம், எவரெஸ்ட் கார்டன், என்ற முகவரியில் சந்தோஷ், என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10.10.2020 அன்று மேற்படி வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் (11.10.2020) திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 7 1/2 சவரன் தங்க நகைகள், 2 1/2 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து சந்தோஷ் T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அம்பத்தூர் துணை ஆணையாளர் தீபா சத்யன், இ.கா.ப நேரடி கண்காணிப்பில் எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையாளர் .M.சம்பத், காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த 150க்கும் மேற்ப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தீவிர புலனாய்வு மேற்கொண்டும், மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பாலாஜி என்பவரை கைது செய்தனர்.
குற்றவாளியிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 65 சவரன் தங்க நகைகள், 2.4 கிலோ வெள்ளிப்பொருட்கள், 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாலாஜி பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் மேலும் 9வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியுள்ளது தெரியவந்தது. குறுகிய காலத்திலே குற்றவாளியை கைது செய்த துணை ஆணையாளர் காவல் குழுவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


Comments (0)
Facebook Comments (0)