மன உளைச்சலில்பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவலர்கள் ...

மன உளைச்சலில்பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவலர்கள் ...

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் ஒரு வருடத்திற்கு முன்பு  வரை  2 ஆய்வாளர்கள் மற்றும் 4 போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வந்தார்கள். தற்போது ஒரே ஆய்வாளர் தலைமையில் பத்துக்கும் குறைவான போக்குவரத்து காவலர்கள் மட்டுமே பணியாற்றும் நிலையில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களை குறைத்து உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஆய்வாளர் மற்றும் உதவியாளர்கள் பற்றாக்குறையால் பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை பணியாற்றி வருகிறது. தற்போது பணியில் இருக்கும் போக்குவரத்து ஆய்வாளர் தனது மகன் மற்றும் பேரன் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலம் குன்றி  இறந்துள்ளனர். அந்த குடும்ப சூழ்நிலையில் தற்போது பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றார். இந்த கொரோனா பேரிடர் காலங்களில் போக்குவரத்து ஒழுங்கு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக போக்குவரத்து காவல்துறை பணியில் ஒரு ஆய்வாளர் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் பணிநியமனம் செய்ய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் IPS., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.