About Us

வணக்கம்! பொதுமக்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் போலீஸ்கிட்ட சொல்லலாம். போலீஸ்க்கே ஒரு கஷ்டம்னா...
அவர்களும் நம்மவர்கள்தானே! நம் பாதுகாப்புக்காகத் தங்களின் சுக துக்கங்களை மறந்து கடமை செய்யும் அவர்களுக்கு உங்களில் ஒருவனாக தோள் கொடுக்கவும், அவர்களின் துயர் துடைக்கும் ஆறுதலாகவும்தான் இந்த காவலர் வாய்ஸ்!

விரைப்பும் வீராப்புமாகவே காட்சியளிக்கும் அவர்களுக்குள் இருக்கும் கலைஞனை அடையாளப்படுத்தும் வகையில் கட்டுரை உள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்கள் சேவைகளைச் செய்யும் காவலர்களையும் அடையாளப்படுத்துகிறோம்!

சாதனையாளர்களைப் பாராட்டும் அதே வேளையில், சிலர் பொறுப்புகளை மறந்த நிலையையும் பொறுப்பாகச் சுட்டிக் காட்டுகிறோம்.

வலைதளம் மட்டும் இல்லாமல் உங்கள் கரங்களில் தவழும் வண்ணம் காவலர் வாய்ஸ் மாத இதழாகவும் வண்ணப் பக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கடைகளிலும் கிடைக்கும்!

அன்புடன்,
ஜெ.சேர்மராஜன்
ஆசிரியர்.