மேற்கு மண்டல இணை ஆணையாளர் S.இராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் காவல் சிறார் மன்ற நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கி வாழ்த்தினார்...
மெரினா காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு இணை ஆணையாளர் கல்வி உபகரண தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் சென்னை பெருநகர காவல் துறையில், கடந்த 2021-ம் ஆண்டு 38 காவல் சிறார் மன்றங்கள் புதிதாக துவக்கப்பட்டதுடன், மொத்தம் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் சென்னை பெருநகர காவலில் இயங்கி வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு மேற்கு மண்டல இணை ஆணையாளர் இராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் சிறப்பு அதிகாரியாக நியக்கப்பட்டு, சிறப்பாக செயல்படவும், சிறார்கள் கல்வி, விளையாட்டு மற்றும் தனித்திறமைகளில் சிறந்து விளங்கவும் பல்வேறு நலத்திட்டங்கள் நடத்தப்ப்டடு வருகிறது. மேலும். மேற்கு மண்டல இணை ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில் கடந்த ஒரு வருடமாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 112 காவல் சிறார் மன்றங்களின் மீது தனிக்கவனம் செலுத்தி, புத்துயிர் அளிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் சிறார் மன்றங்களுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள், கணினிகள் வழங்கி பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டும், கல்வி சுற்றுலாவாக மெட்ரோ இரயில் பயணம், துறைமுகத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு பிரிவு கப்பலை பார்வையிடுதல், மருத்துவ முகாம், விழிப்புணர்வு முகாம், சிறுமியர் மற்றும் சிறுவர் ஆகியோரிடையே விளையாட்டு போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.



இதன் தொடர்ச்சியாக இன்று (16.07.2022), D5 மெரினா காவல் நிலைய சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றததில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு மண்டல இணை ஆணையாளர் S.இராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு, புத்தகங்கள், எழுதுகோல், புத்தகப்பை மற்றும் கணித உபகரண பெட்டி அடங்கிய தொகுப்பினை வழங்கி, நன்கு கல்வி பயில வாழ்த்தினார். மேலும், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ITC நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் சிறுவர் மன்ற மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
Jpr,Chennai.


Comments (0)
Facebook Comments (0)