கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் இரண்டு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கிய இருவரை கைது செய்தனர்...
தமிழக காவல்துறை தலைவர் முனைவர் டாக்டர் சைலேந்திரபாபு ஐபிஎஸ்.,தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ்., ஆகியோர்களின் 2.0 கஞ்சா ஒழிப்பு, போதைப் பொருள் பயன்படுத்தலைதடுக்கும் விதமாக தமிழகமெங்கும் சிறப்பான செயல்பாடுகள் மூலம் தினந்தோறும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகின்றனர். இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்கால இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைகளைபேணி பாதுகாக்க முடியும் என்ற சிறப்பான செயல்பாடுகளை கடந்தகால நிகழ்வுகளை சமூகவலைதளங்கள் மூலமாகவும்,தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாகவும் பார்க்க கேட்க முடிகின்றது,தற்போது தேனி மாவட்டம் கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன்,சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா, தனிபிரிவு காவலர் வல்லரசு ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் குமுளி பகுதிகளில்தடை செய்யப்பட்ட பான் மசாலா,புகையிலை பொருட்கள் சுமார் 30 கிலோவுக்கு மேல் பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது,பிடிபட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வினை அப்பகுதி பொது மக்கள் மற்றும் தேனி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஐபிஎஸ்., ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.மற்றும் தனிப்படையினர்.
செல்வம், தேனி.


Comments (0)
Facebook Comments (0)