சென்னை அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் பிரபல கார் திருடன் ஆஸ்டின் இன்பராஜை கைது செய்தனர்...

சென்னை அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் பிரபல கார் திருடன் ஆஸ்டின் இன்பராஜை  கைது செய்தனர்...

சென்னை  கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டம் , அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக  தொடர்ந்து  Bolero Pickup மற்றும், Ashok Leyland Dosth வாகனம் திருடு போனதாக வந்த புகாரினையடுத்து,  அக்கும்பலை பிடிக்க  அயானவரம்  உதவி ஆணையர் Tr. ஜவஹர் மேற்பார்வையில் ,  _குற்றப்பிரிவு ஆய்வாளர்  Tr. சபரிநாதன் தலைமையில் , Si. மீனா, தலைமை காவலர்கள் Tr. சரவணகுமார் HC 26286, Tr. பிரதீப் HC 27023, Tr. ராஜேஷ் HC 27371 ,  Tr. பெண் ஆர்வின் சாம் HC , Gr.1 Tr. திருகுமரன், Tr.பழனிவேல் Gr.1, Tr. அமாலுதீன் Gr.1,   காவலர்கள், Tr. திருநாவுக்கரசு, Tr. சூர்ய பிரகாஷ் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது.   இதனையடுத்து சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த  தாமோதரன்/56, என்ற நபரை போலீசார் பிடித்து  நடத்திய விசாரணையில்,  குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் ஈபென் இன்பராஜ்/49 என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு கார் மற்றும் சரக்கு வாகனங்கள் திருடுவதற்கு  அடிக்கடி சாவி தயார் செய்து கொடுக்கும் வேலையை தாமோதரன் செய்து வந்துள்ளார்.

அதன்படி வாகனங்களை நோட்டமிட்டு அந்த காருக்கு ஏற்ற சாவிகளை  தாமோதரன் மற்றும் ஆஸ்டின் ஈபன் இன்பராஜ் ஆகிய இருவரும் தயார் செய்து திருடி உள்ளனர்.  திருடிய வாகனத்துடன் கோவை உக்கடம் மற்றும் பல்லடம் பகுதியில் விற்க சுற்றி வந்த குற்றவாளி ஆஸ்டின் இன்பராஜ் யைப் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.. பிரபல    சரக்கு வாகன  திருடனான இவருக்கு தமிழகம் முழுவதும் கன்னியாகுமரி, நாகர்கோவில்,  தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை -யின் பல்வேறு காவல் நிலையத்தில் 35 க்கும்  கார் திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் நடத்திய விசரணையில் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய  மதுரையைச் சேர்ந்த தனகோபால் ( Madurai High court Advocate ) மதுரை வாடிப்பட்டி யை சேர்ந்த ஜெயராஜ்,  கோயம்புத்தூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது @ இமாம் அலி ( அல் உமா இயக்கத்தை சேர்ந்த - 1998 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 13 வருட சிறை தண்டனை பெற்று வெளியே வந்தவர்  என்பதும் ,ஏற்கனவே கோவை, புளியங்குளம் பகுதியில் ஒரு கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது...) கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, Ashok Leyland Dosth சரக்கு வாகனம், ஒரு Bolero Pickup என இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Jpr,Chennai.