சென்னையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்...

சென்னை B2 காவல்நிலையத்தில் ஆயுதபடை காவலராக தனசேகரன் பணிபுாிந்து வருகிறாா் . இவா்  பல சமூகஅக்கறையோடு சேவை செய்துவருகிறாா். இன்று பிராட்வே கோட்டை ரயில் நிலையத்தில் வெளியே செல்லும்பாதை மற்றும்  சிக்னல்  இருக்கும் இடத்திலும், தயவு செய்து சாலையை கடக்கும் போது செல்போன் பேசவேண்டாம் கவனமாகசெல்லுங்கள் என்று விழிப்புணர்வு அட்டைகளை தயாா்செய்து பல்வேறு இடங்களில் ஒட்டினாா்.அப்போது ஆட்டோ ஒட்டுநா்களும் தாமாக முன்வந்து எங்கள் ஆட்டோவிலும் ஒட்டுங்கள் என்றும் ஆா்வமுடன் கேட்டனா்கள். இவ்நிகழ்வை கண்ட பொதுமக்களும் வெகுவாக  காவலா் தனசேகரனை பாராட்டினாா்கள்.

சூர்யா...