திண்டுக்கல் எஸ்.பி சீனிவாசன் தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை...
திண்டுக்கல் அருகே 10,000-க்கும் மேல் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல், 5 பேர் கைது - எஸ்பி தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை ....
திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசிய தகவலின் படி எஸ்.பி தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் அனுமந்தராயன் கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 180ml அளவுகொண்ட 10,000-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சோதனையில் இன்பராஜ் உட்பட 6 நபர்களை கைது செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.சம்பவ இடத்தில் எஸ்.பி சீனிவாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.


Comments (0)
Facebook Comments (0)