புலம்பும் காவலர்கள் மாநகர காவல்துறை ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா...

புலம்பும் காவலர்கள் மாநகர காவல்துறை ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா...

 

தமிழகத்தில் காவலர்கள்,காவல்துறை அதிகாரிகள் உட்பட  பணி செய்ய பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது.இந்நிலையில்கொரோனா காலத்தில் காவல்துறையில் பணி செய்யும் பலருக்கு நோய் தொற்றால் சிகிச்சையில் இருப்பதால் பணிபுரிய காவலர்கள் பெருமளவில் இல்லை. இந்நிலையில் காவலர்கள்மற்றும் அதிகாரிகள் A-B-C என்ற முறையில் காவல்பணி செய்ய காவல்துறை இயக்குநர் திரிபாதி அவர்களால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திருச்சி மாநகரத்தில் A-B SHIFT  ட்டால்
 (A team 8 to 14 -B team 14to 21)இரவு பணி (again A team 21 to மறுநாள் 8 am )
B team 8 to 14 )சுழன்று  கொண்டே பணி செய்ய தங்களது உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்.காவலர்கள் துவண்டு கொண்டே
விடிவதும்தெரியாமல்விடிவதுமுடிவதும்தெரியாமால்காவலர்கள்துயரபட்டு வருகின்றனர்.ஆகையால் ABC முறை அமல்படுத்த வேண்டும் என்பதே காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அடுத்ததாக பயண படி ,ETR முறையாக மாதந்தோறும் வழங்கபடுவதில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.திருச்சி மாநகர சட்ட ஒழுங்கு பணிக்கு ஆயுதபடை காவலர்கள் விருப்ப மனு கொடுத்துபல ஆண்டுகள் கழிந்தும் இன்னும் அனுப்பாத நிலையானது  திருச்சி மாவட்டத்திற்கு பணி மாறுதல் வேண்டி விருப்ப மனு  கொடுக்க தோன்றுகிறது.மேலும் எங்களுடைய பிரச்சனைகளை ஆணையாளர் லோகநாதன் அவர்கள் தலையிட்டால் மட்டுமே தீர்க்கப்படும் என்று கூறிவருகிறார்கள்.