மனநிலை பாதிக்கபட்டோர் இல்லத்தில் உணவு வழங்கிய நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்…
GMS டிரஸ்ட் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக ரம்ஜான் திருவிழா.. மனநிலை பாதிக்கபட்டோர் இல்லத்தில் உணவு வழங்கிய நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்
திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் மற்றும் GMS டிரஸ்ட் சார்பாக ரம்ஜான் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகே உள்ள மனநிலை பாதிக்கப்பட்டோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் பாதுகாப்பு சேவை மையத்தில் 150க்கும் மேற்பட்டகுழந்தைகளுக்குபிரியாணிவழங்கபட்டது. திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் T.Pசுரேஷ் குமார் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கினார்,

விழாவில் லயன்ஸ் கிளப் வட்டார தலைவர் மணிகண்டன், தலைவர் சங்கரவேலு, நிர்வாகிகள் ஆவுடை நாயகம், குளோரி மணிகண்டன், குமார், மின்னல் சிவா,GMS டிரஸ்ட் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர்.அந்தோணி சேவியர்.


Comments (0)
Facebook Comments (0)