அகில இந்திய போலீஸ் குழு விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டினார்...
71 ஆவது அகில இந்திய போலீஸ் குழு விளையாட்டுப் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் டிசம்பர் 10 முதல் 15 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் யோகா பிரிவில் பெண் காவல் ஆய்வாளர் ஆனந்த லட்சுமி வெள்ளி பதக்கமும், பெண் தலைமை காவலர்கள் கங்காதேவி, தில்ஷாத் பேகம், தீபா மற்றும் பெண் காவலர் சிஜி ஆகியோர் யோகா பிரிவில் வெண்கல பதக்கமும், பெண் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி, பெண் காவலர்கள் மோனிஷா மற்றும் சுமதி ஆகியோர் செபக் டக்ரா விளையாட்டு பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றனர்.
அதைப்போல் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற 12 வது அகில இந்திய போலீஸ் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண் ஆய்வாளர் திருமதி. ஹேமா மாலா தங்கப்பதக்கம் வென்றார். காவல் ஆய்வாளர் திரு. சதீஷ் வெண்கல பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவலர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திர பாபு இ. கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்கள். ஆயுதப்படை காவல் துறை கூடுதல் இயக்குனர் திரு. ஜெயராம், இ.கா.ப., மற்றும் மாநில குற்ற ஆணைய காப்பக காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. வினித் தேவ் வான்கடே, இ.கா.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.
Jpr,chennai.


Comments (0)
Facebook Comments (0)