காவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.,காவல்ஆளிநர்களுக்கு நிதிமேலாண்மை வகுப்பினை துவக்கிவைத்தார்...
சென்னை பெருநகர காவல்ஆணையாளர், சேமிப்புபழக்கத்தை கடைபிடிக்கும் பொருட்டு காவல்ஆளிநர்களுக்கு நிதிமேலாண்மை வகுப்பினை துவக்கிவைத்தார்.
சென்னை, பெருநரகாவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவின்பேரில், காவல்ஆளிநர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக, காவல் ஆளிநர்கள் தங்களதுவருமானத்தை வீண்செலவு செய்யாமல் சேமிக்கும்பழக்கத்தை கடைபிடிக்க நிதிமேலாண்மை வகுப்புகள் நடத்த காவல்ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.
அதன்பேரில், இன்று (18.06.2022) காலை, காவல்ஆணையரகத்தில் காவல் ஆளிநர்களுக்கான நிதிமேலாண்மை வகுப்பினை ( Financial Management Workshop ) சென்னைபெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள்துவக்கிவைத்தார்.

காவல்ஆணையாளர்அவர்கள்சிறப்புரையில், காவல்ஆளிநர்கள் தங்களது சம்பளத்தை வீண்செலவு செய்யாமல் நல்லமுறையில் சேமிக்கவும், வீண்செலவுகள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானத்தை வீண்விரயம் செய்யாமல் நல்லவழியில் சேமிக்கவும் காவல்ஆளிநர்களுக்கு இவ்வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும், இதுபோல வாரந்தோறும் 150 காவல்ஆளிநர்களுக்கு இவ்வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிதி மேலாண்மை வகுப்பின் சிறப்பு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள, பலகல்லூரிகள் மற்றும்நிறுவனங்களில் சிறப்புவிரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் நரேந்திரா அவர்கள் சேமிப்புபழக்கத்தின் நன்மைகள், சரியானசேமிப்புமுறையைதேர்ந்தெடுக்கும்வழிமுறைகள், அவற்றைகையாளும்முறை, சேமிப்பினால் கிடைக்கும்எதிர்கால நன்மைகள் குறித்து காவல்ஆளிநர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னைபெருநகரகாவல்கூடுதல்ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்.லோகநாதன், இ.கா.ப., துணைஆணையாளர்கள் செந்தில்குமார் (தலைமையிடம்),கே.சௌந்தராஜன்(ஆயுதப்படை) மற்றும் 150 ஆண், பெண்ஆயுதப்படைகாவல்ஆளிநர்கள்கலந்துகொண்டனர்.
Jpr, senior correspondent.


Comments (0)
Facebook Comments (0)