கண்காணிப்பு கேமராக்கள் மையம் நெல்லை மாநகரகாவல் ஆணையர் அவினாஷ் குமார் IPS திறந்து வைத்தார்...

கண்காணிப்பு கேமராக்கள் மையம் நெல்லை மாநகரகாவல் ஆணையர் அவினாஷ் குமார் IPS திறந்து வைத்தார்...

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையில் கண்காணிப்பு கேமராக்கள் மையம்நெல்லை மாநகரகாவல் ஆணையர் அவினாஷ் குமார் IPS திறந்து வைத்தார்.

குற்ற சம்பங்களை முற்றிலும் தடுக்கும் விதமாக நெல்லை மாநகர காவல்துறை சார்பாக நகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது..நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகளும் நடைபெற்று வருகிறது.. பாளையங்கோட்டை காவல் நிலைய பகுதிக்குள் உள்ள முக்கிய சாலையான சீவலப்பேரி ரோடு வழியாக சென்னை புறவழி சாலையில் மிக எளிதாக  இணைய முடியும் என்பதாலும்...நெல்லை மற்றும் அடுத்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் பல கிராமங்களை இணைக்கும் மிக முக்கிய சாலை என்பதாலும்... மாநகர பகுதியில் உள்ள சீவலப்பேரி ரோடு மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்க ...  ஒரு வருட காலமாக தொடர் வாகன சோதனையும் காவல்துறையினர் நடத்தி வந்தனர்.. 

இந்நிலையில் மணிகூண்டு அருகே நெல்லை மாநகர காவல்துறையால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் ஆணையர் அவிநாஷ் குமார் IPS திறந்து வைத்தார்.
 மரகன்றுகளை நடும் நிகழ்வுகளும் நடைபெற்றது ...

தொடர்ந்து நடைபெற்ற விழாவில்... சாந்திநகர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக சிறப்பாக செயல்படுவதாக காவல் ஆய்வாளர் திருப்பதி மற்றும் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் வாழ்த்து கூறியதை அடுத்து...

பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வாளர் திருப்பதி.. உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு காவல் ஆணையர் அவிநாஷ் குமார் , காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் சால்வை அணிவித்து பாராட்டினர்.

காவல் ஆணையர் அவிநாஷ்குமார் பேசும் போது இது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு பொதுமக்கள் பாராட்டு விதமாக காவல்துறையினர் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.. காவல்துறையினரும் பொதுமக்களும்இதே போல் இணைந்து பணியாற்றி குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றார்.

துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் சிறந்த முறையில் ஒத்துழைப்பு தரும் சாந்திநகர் பொதுமக்களுக்கு நன்றி... தற்போது இந்த பகுதியில் 19 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன..மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக குற்ற சம்பவங்களை முழுவதுமாக தடுக்க முடியும்..பொதுமக்கள் பாராட்டும் விதமாக செயல்பட்ட ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் குறித்து பெருமிதம் கொள்கிறேன்..இதே போல மாநகர காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

விழாவில் காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் உதவி ஆணையர் விவேகானந்தன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாளை காவல்நிலைப ஆய்வாளர் திருப்பதி, உதவி ஆய்வாளர் சண்முகமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.