நேர்மை ஆய்வாளருக்கு நினைவஞ்சலி...


நேர்மை ஆய்வாளருக்கு நினைவஞ்சலி
நெகிழ செய்த நெல்லை பொதுமக்கள்
பொது மக்களுக்காக மிக நேர்மையாக உழைத்த ஒரு ஆய்வாளருக்காக நெல்லை மக்கள் செலுத்திய நினைவஞ்சலி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது ,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மிக நேர்மையாக பணியாற்றி சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் ஆய்வாளர் ராமையா..
சமூக விரோதிகளின் கொட்டங்களை முற்றிலும் அடக்கி..நேர்மையின் சிகரமாக பணிபுரிந்த இவரின் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடம் பெரும் புகழை பெற்று தந்தது,
பணி மாற்றம் செய்யப்பட்டு சென்னையில் பணி புரிந்து வந்த ஆய்வாளர் ராமையா கடந்த வருடம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்,
அவரது இறுதி சடங்கின் போதும் யாரும் எதிர்பாராவண்ணம் நெல்லை மாவட்ட பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.. இந்திலையில் நேற்று ஆய்வாளரின் முதல் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்ட நிலையில்.. பொதுமக்கள் சார்பாக நெல்லை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நினைவஞ்சலி போஸ்டர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது,
இறந்தவர் ஒரு அரசியல்வாதியோ அல்லது
அமைச்சரோ இல்லாத நிலையில்... மாநகரம் முழுவதும் காணப்படும் போஸ்டர்கள் மறைந்து ஒரு வருடம் ஆகியும் ஒரு காவல் அதிகாரியை பொதுமக்கள் மறக்காமல் நன்றி உணர்வுடன் நினைவு கூர்வது அவரது நேர்மையான , உண்மையான நடவடிக்கைகளை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளது,
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் ஆய்வாளர் ராமையாவிற்கு நினைவஞ்சலி போஸ்டர்கள் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது
நேற்று ஆய்வாளர் ராமையா படம் அலங்கரிப்பட்டு பொதுமக்கள் சார்பிலும்... காவலர்கள் சார்பாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது , முதியோர் இல்லத்திலும்...மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்திலும் உணவு வழங்கப்பட்டது,
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.. என்று ஒட்டு மொத்த காவல்துறையினருக்கும் பெருமை சேர்த்து மறைந்த ஆய்வாளர் ராமையா அவர்களுக்கு காவலர் வாய்ஸ் சார்பில் இதய நினைவஞ்சலி.


Comments (0)
Facebook Comments (0)