காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல்துறை சாதனைகளை விளக்கும் LED TV திறந்து வைத்தார்...
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் சாதனைகள், விழிப்புணர்வு வாசகங்கள்,அடங்கிய வீடியோக்கள்,காவல் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை அறியும் வகையில் LCD TV-அமைக்கப்பட்டுள்ளது. இதனை *இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நெ. மணிவண்ணன் IPS., திறந்து வைத்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS.,தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தரும் படி கேட்டுக் கொண்டார்.மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளும் பலப்படுத்தப்பட்டு சோதனைகள் நடைபெறும்.மருத்துவம் மற்றும் அவசர தேவைகளுக்காக வருபவர்களை தவிர்த்து ,ஊரடங்கை மீறி
வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் , என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் முருகன், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மரிய கிளாஸ்டன் ஜோஸ், மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Comments (0)
Facebook Comments (0)