அரசு மருத்துவமனையில் காயமடைந்த பெண் காவலரை சந்தித்த சென்னை கமிஷனர்...

அரசு மருத்துவமனையில் காயமடைந்த பெண் காவலரை சந்தித்த சென்னை கமிஷனர்...

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் காவலர்  அனிதாவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நேற்று (08.8.2018) ராஜாஜி ஹால் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி காயமடைந்த பெண் காவலர் அனிதா மற்றும் பொதுமக்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் K-5 பெரவள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய முதல்நிலை பெண் காவலர் அனிதா (மு.நி.கா.36459) என்பவரது வலது கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (09.8.2018) காலை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் மேற்படி பெண் காவலர் அனிதா வை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  காவலர்க்கும் மற்றும் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் 6 பேருக்கும் சிறந்த முறையில் சிகிச்சையளிக்குமாறு அரசு பொதுமருத்துவமனையின் டீன் திருமதி.ஜெயந்தி, RMO திரு.இளங்கோ மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் திரு.நாராயணசாமி ஆகியோரை கேட்டுக்கொண்டார்.
 மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  அரவிந்த், ஆ/வ.24, S/0 கனகராஜ், கனிகரன், ஆ/வ.24, த/பெ.வேல்முருகன் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த  பிரபாகரன், ஆ/வ.65, புழல், அண்ணா நினைவு நகரைச் சேர்ந்த கென்னடி, ஆ/வ.55, த/பெ.பிரகாசம், சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த நாகூர் கனி, ஆ/வ.53, த/பெ.முத்து மற்றும் சென்னையைச் சேர்ந்த  தங்கராஜ், ஆ/வ.60 ஆகிய  6 நபர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல்  கூறினார்.