சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் ஆவியூர் சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கை...
தமிழக அரசால்அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று (24-05-2021) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதுமாக காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு தேவையின்றி வெளியில் சுற்றி வருபவர்களை கண்டித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

மாவட்ட ஆரம்ப எல்லை பகுதியான ஆவியூர் சோதனை சாவடியில் இன்று காலை முதலே சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி அவர்களின் தலைமையில் தீவிர வாகன தணிக்கையில் காவலர்கள் இ-பதிவு செய்த வாகனம் மற்றும் மருத்துவ தேவைக்காக வந்த வாகனங்களை மட்டும் அனுமதித்தனர்.
செல்வராஜ்
நிருபர்...


Comments (0)
Facebook Comments (0)