மாவா தயாரித்த 2 பேர்  E-3 தேனாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் கைது...

மாவா தயாரித்த 2 பேர்  E-3 தேனாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் கைது...

 மாவா தயாரித்த 2 பேர்  E-3 தேனாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் கைது...

 E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்  (24.01.2019) மதியம் சுமார் 12.00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடு, டாஸ்மாக் கடை அருகில் கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு மாவா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. மாவா வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முனாகுமார், வ/21, த/பெ.தினேஷ்தாண்டி மற்றும் ஆனந்த், வ/37, த/பெ.சன்னி ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் தேனாம்பேட்டை, காமராஜர் தெருவிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு மாவா தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி வீட்டில் சோதனை மேற்கொண்டு 9 கிலோ மாவா, 8 கிலோ ஜர்தா,  2 கிரைண்டர், செல்போன்கள்-3 மற்றும் பணம் ரூ.1,700/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டடு சிறையில் அடைக்கப்பட்டனர்.