தப்பி ஓடிய சிறுவர்களை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்...

தப்பி ஓடிய சிறுவர்களை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்...

திருவள்ளூர்  ஒருங்கிணைந்த  கிராமப்புற  சமூக மேம்பாட்டு  சங்கத்தில்  தங்க   வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறார்கள்  கடந்த 11 ஆம் தேதி  தப்பி ஓடிவிட்டனர்.  இது சம்பந்தமாக  அதன் ஒருங்கிணைப்பாளர்  பழனி திருவள்ளூர் நகர காவல்நிலையத்தில்  புகார் மனு  அளித்ததில்  வழக்குப் பதிவு  செய்யப்பட்டு  தேடிவந்தனர். நேற்று (30/7/2020) காலை  சோழவரம்  பகுதியில்  இருந்த  இரு சிறார்களையும்  திருவள்ளூர் நகர  காவல்ஆய்வாளர்   இரவிகுமார் மற்றும் சோழவரம் காவல் ஆய்வாளர் நாகலிங்கம் ஆகியோர் தலைமையிலானகுழுவினரால் மீட்டு சமூக  மேம்பாட்டு  சங்கத்தில்  ஒப்படைத்தனர். சிறப்பாக பணி  செய்த  குழுவினரை மாவட்ட  காவல்  கண்காணிப்பாளர்   அரவிந்தன்IPS., நேரில்  அழைத்து   பாராட்டினார்.