மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் காவலர் குறை தீர்ப்பு முகாம்...
மதுரை மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் இன்று (30.09.2021) மாவட்ட ஆயுதப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த குறை தீர்ப்பு முகாமில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் வரை மொத்தம் 150 பேர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



Comments (0)
Facebook Comments (0)