சிறுவர் விளையாட்டு பூங்கா காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS திறந்து வைத்தார்...

சிறுவர் விளையாட்டு பூங்கா காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS திறந்து வைத்தார்...

நெல்லை மாவட்டம் தாழையூத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS, திறந்து வைத்தார்...

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா... என்று
பாரதியாரின் பாடல் வரிகளுக்கு  வடிவம் அமைத்து கொடுத்து சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்துள்ளது நெல்லை மாவட்ட காவல் துறை.

தென் மாவட்டங்களில்  முதன் முறையாக இரு சக்கர காவல் ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்திய நெல்லை மாவட்ட காவல்துறை தற்போது
சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு பூங்காவை அமைத்துள்ளது .

 

தாழையூத்து காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , இன்று திறந்து வைத்தார். சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாக மரகன்றுகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆலோசனையில்..
தாழையூத்து காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா நேரடி திட்டமிடலில், காவலர்களின் சீரிய முயற்சியால் அழகாக வடிவமைக்கபட்டுள்ளது.

விழாவில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்றைய சிறுவர் சிறுமியர்கள் உடல் வலிமையையும்,ஆரோக்கியத்தையும் தேவையான மன உறுதியையும் சிறு வயதிலேயே பெறும் வகையில் இந்த பூங்காவை உருவாக்கி உள்ளோம். இவர்கள் நாளைய இளைஞர்களாக உருவாகி தேசத்திற்க்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களாக உருவாக வேண்டும் என்றார்.

விழாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜு ,ஆய்வாளர்கள் பத்மநாப பிள்ளை, ஷோபா ஜென்சி, உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் , பொதுமக்கள் , வியாபாரிகள் கலந்து கொண்டனர்.