ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் உதவி செய்த தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள்..

 ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் உதவி செய்த தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள்..

நடிகர் விஜய் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட சேர்த்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை... பிறந்த நாள் விழாக்களை தவிர்த்து , நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரரின் குடும்பத்திற்க்கு கொடுத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளனர் தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள்.

ரசிகர்கள் என்றாலே தங்களது தலைவர்களை அடுத்த முதல்வராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டுவது..சமூக வலைதளங்களில் பிற நடிகர்களின் ரசிகர்களுடன்  சண்டையிடுவது... கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது என்று தான் காலகாலமாக இருந்து வருகிறார்கள்.. 

போட்டி நடிகர்களின் ரசிகர் மன்றங்களுக்கிடையே கடும் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இவர்களிடம் விலகி  நடிகர் விஜய்..ன் ரசிகர்கள் சற்று வித்தியாசமான அணுகுமுறையில் சமூக பிரச்சனைகளில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்

பள்ளிகளுக்கு வர்ணம் பூசுவது... சமையலறை... கழிப்பிடங்கள் கட்டி கொடுப்பது.. பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வி கட்டணத்தை ஏற்று கொள்வது.. பெருநகரங்களில் காவல் துறைக்கு உதவியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கொடுப்பது என அசத்த தொடங்கி விட்டனர்

சமீபத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில்.. விஜய் ரசிகர்களின் பங்கு பாரட்டத்தக்கதாக அமைந்து வருகிறது.. தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஒவியங்கள் வரைந்தது  மட்டுமல்ல..மாஸ்க்குகள் , கபசுர குடிநீர் ஆகியவற்றை  தமிழகமெங்கும் வழங்கி வரும் இவர்கள்..வறுமையில் வாடும் ஏழை எளியவர்களுக்கும் அரிசி, மளிகை பொருட்கள் என தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்..ன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட சேர்த்து வைத்திருந்த 1 லட்ச ரூபாயை... சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு வழங்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் .தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பாண்டி இராமநாதபுரத்தில் உள்ள ராணுவ வீரர் பழனியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று தங்களது இதய அஞ்சலியையும்.. நிவாரண தொகையும் வழங்கி வந்துள்ளார்..

இது குறித்து தேனி மாவட்ட தலைவர்  பாண்டி நம்மிடம்... கொரானா வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் எங்கள் தளபதி அவர்கள் ரசிகர்கள் அனைவரையும்.. எங்களின் குடும்பத்தினரையும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.

எங்கள் மக்கள் இயக்க பொருப்பாளர் ஆனந்த் அவர்கள்  மூலமாக   இத்தகவல்களை தெரிவித்த அவர். இந்த முறை பிறந்த நாள் கொண்டாட்டங்களை முற்றிலும் தவிர்த்து.கொரானா வினால் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கும் ஏழை எளியவர்களுக்கு உதவும் படி அறிவுறுத்தியுள்ளார்..

எங்களது தளபதி,மாநில பொருப்பாளரின் வழிகாட்டுதலின் படியும் நாங்கள் பிறந்த நாள் விழாக்களை தவிர்த்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாயை வழங்கி உள்ளேன்.. பழனி அவர்களின் உயிரிழப்பு வேதனையளித்தாலும்.. அவர்களின் குடும்பத்திற்க்கு உடனே உதவ முடிந்ததில் மகிழ்ச்சி.. இதை என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் என்றார்.