காவல் பணியிலும் பசிப்பிணி போக்கும் தாமஸ் மவுண்ட் காவல் துறை!
சென்னை,பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன, அதில் எழில் நகர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை (27 வது நாள்) மதிய உணவு செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

இது போல பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரணமாக உதவிகள் கிடைத்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் கடந்த ஒரு மாதமாக குறிப்பிட்ட இடத்தில் இப்படி தினமும் 500 நபர்களுக்கு உணவு வழங்கிய நிகழ்வுகளை காவல் அதிகாரிகள் வெளிப்படுத்த விரும்பவில்லை!
இப்போதும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நெகிழ்ச்சியுடன் சொன்னதை கேட்டு தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் இனி எவ்வளவு நாட்கள் இப்படி உணவு வழங்கப்படும் என தெரிந்து கொள்ள *துணை ஆணையர் K.பிரபாகர்* அவர்களை தொடர்பு கொண்ட போது… ஊரடங்கு முழுவதும் தளர்த்த பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



Comments (0)
Facebook Comments (0)