காவல் துணை ஆணையர் ராஜராஜன் கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்...
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்ட நிலையில் அர்ச்சகர்கள் வறுமையில் வாடும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் அர்ச்சகர்கள் , பணியாளர்கள் 50 பேர்களுக்கு அரிசி, கோதுமை, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மாநகர காவல்துணையர் ராஜராஜன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது காவல் உதவி ஆணையர் சதிஷ் குமார், ஆய்வாளர் ராமேஸ்வரி,
லயன்ஸ் கிளப் பட்டைய தலைவர் மணிகண்டன், செயலாளர் சங்கரவேலு, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் Dr. வாலேஸ்வரன், மின்னல் சிவா, குளோரி மனிகண்டன், முத்துகுமாரசாமி, சங்கர்,விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் லயன் சஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கார்த்திக்,நிருபர்.


Comments (0)
Facebook Comments (0)