செல்வநாகரத்தினம் IPS பணியில் இருந்த காவலர்களுக்கு தேநீர் பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கினார்...

செல்வநாகரத்தினம் IPS பணியில் இருந்த காவலர்களுக்கு தேநீர் பிஸ்கட் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கினார்...

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள நாகப்பட்டினம்  காவல் நண்பர்கள் குழு உறுப்பினர்களுக்கு கையுறை, முககவசம் மற்றும் சானிடைசர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் IPS வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்த பகுதிகளில் ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு காலை மாலை இரவு என உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் மாலை நேரத்தில் பிஸ்கட் கடலை உள்ளிட்ட சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்  தொடங்கி வைத்தார். மேலும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் நண்பர்கள் குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு கையுறை, முககவசம் மற்றும் சானிடைசர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். 


நிகழ்ச்சியில் காவல் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முஜிப் ஷரீக் மற்றும் நாகப்பட்டினம் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.