திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு IPS அவர்கள் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை பார்வையிட்டார்...

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு IPS அவர்கள்  நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை பார்வையிட்டார்...

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களால் திருப்பூர் மாநகரம் உள்பட 5 மாநகரங்களுக்கும், எட்டு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டது.

​​திருப்பூர் மாநகரத்திற்கு வழங்கப்பட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை நேற்று (11.07.2022) மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்.ஏ.ஜி.பாபு, இ.கா.ப. மாநகர காவல் ஆணையர், திருப்பூர் மாநகரம் அவர்கள் பார்வையிட்டார்.

​​ஏ.ஜி.பாபு, இ.கா.ப. மாநகர காவல் ஆணையர் அவர்கள் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை பார்வையிட்டு கூறுகையில் இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவியாக அறிவியல்ரீதியான சேவைகளை வழங்க முடியும். குறிப்பாக குற்றம் நிகழ்ந்த சம்பவ இடத்திலேயே ரத்தக்கறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சுடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்க முடியும்.

குற்றம் நடந்த இடத்திலேயே குற்றத்திற்கான காரணத்தை அடையாளம் காணுவதற்கும், கையாளுவவதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுதலுக்கும் வழக்கு சம்பந்தமான தடய பொருட்கள் சேதப்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் நடமாடும் தடய அறிவியல் வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து, குற்றத்தை கண்டுப்பிடிக்க முடியும். இந்த நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் தடய அறிவியல் உதவி இயக்குனர் பதவியில் பணியில் இருப்பார் என தெரிவித்தார்.