அதிரடி நடவடிக்கையில் 416 நபர்களை கைது செய்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
( ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. சசி மோகன் , இ.கா.ப )
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் R. சுதாகர் , இ.கா.ப. உத்தரவின்படி , கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத்தலைவர் M.S. முத்துசாமி , இ.கா.ப ., வழிகாட்டுதலின்படி , ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. சசி மோகன் , இ.கா.ப ஊரடங்கு காலத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் , 07.06.2021 முதல் 17.06.2021 வரையிலான 10 நாட்களில் , ஈரோடு மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் சட்ட விரோத லாட்டரி விற்பனை , கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .

( மேற்கு மண்டல காவல்துறை தலைவர் R. சுதாகர் , இ.கா.ப. )
202 நபர்கள் கைது செய்யப்பட்டனர் . அவர்களிடம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் -25 , கஞ்சா -21.5 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா சுமார் 1.5 டன் மதிப்புள்ள 2,09,625 பாக்கெட்டுகள் , சேவல்கள் -8 , பணம் ரூபாய் .1,75,880 / - மற்றும் இருசக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது . பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுடமை ஆக்கப்பட உள்ளன .

( கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத்தலைவர் M.S. முத்துசாமி , இ.கா.ப ., )
மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர் சோதனையில் சட்ட விரோதமாக சாராயம்,கள் மற்றும் மது அரசு அனுமதியின்றி விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 214 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கள்ளசந்தையில் மது விற்பனை செய்வதை பற்றி புகார் தெரிவிக்க 96558 88100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் .சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. சசி மோகன் , இ.கா.ப எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட விரோத செயல்களில் ஈடுபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க 96552-20100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் . தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் .
பாண்டித்துரை, மாவட்ட நிருபர்...


Comments (0)
Facebook Comments (0)