அரியலூர் மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முதியவர்களுக்கு உதவி...
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் k. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முதியவர்களுக்கு உதவி. அனுதினமும் மக்களைக் காக்கும் காவலர்கள் இன்று சற்று ஒரு படி மேல் சென்று அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இல்லம் தேடி சென்று அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை வழங்கி வருகின்றனர்.

வீட்டுக்கு அழைத்து சென்று கொடுத்தால் விருந்தாகும் இருக்கும் இடம் தேடி சென்று கொடுத்தால் அது தர்மம் ஆகும். யார் என தெரியாமல் கொடுத்தால் அது தானமாகவும், இப்படி தானத்தையும் தருமத்தையும் வழங்கிய அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் .
விஜய குமார் , மாவட்ட நிருபர்...




Comments (0)
Facebook Comments (0)