பார்வையற்றோருக்கு கண்களாக செயல்படும் புனித தோமையர் மலை மாவட்ட காவல் துறை!
விழியிழந்தோர் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக புனித தோமையர் மலை மாவட்ட காவல் துறை சார்பாக இன்று பார்வையற்றோரின் 120 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. உதவி வழங்கும் நிகழ்வை துணை ஆணையர் K.பிரபாகர் அவர்களுடன் இணைந்து லயன்.அசோக்குமார் சபாத் அவர்கள் வழங்கினார்கள்.

இதில் உதவிகள் பெற்றுக்கொண்டபயனாளர்கள் ,இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சுவையான உணவு வழங்கியதோடு மளிகை பொருட்கள்,அவசர கை செலவுக்கு பணம், சிறுவர்களுக்கு தின்பண்டங்கள், கொரோனா தொற்று வராமல் தடுக்க
முக கவசம்,கிருமி நாசினி உள்ளிட்ட உதவிகள் வழங்கிய துணை ஆணையர் பிரபாகர் அவர்களுக்கும் , காவல் துறையினருக்கும், லயன்ஸ் கிளப் அசோக்குமார் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.




Comments (0)
Facebook Comments (0)