பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் ...

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் ...

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக கலந்தாய்வு கூட்டம் ...

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு எதிரான குற்றங்களுக்கு புதிதாக புலனாய்வு பிரிவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தென்மண்டல மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பழனிகுமார் அவர்களை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் நியமனம் செய்துள்ளார். மத்திய மற்றும் தென்மண்டல மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் சென்று கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார்கள்.  இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்டம், மதுரை மாநகர்,விருதுநகர், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலிருந்து பெண்களுக்கெதிரான குற்றங்கள் புலனாய்வு பிரிவு, குழந்தைள் கடத்தல் தடுப்பு பிரிவு, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோர்களை வரவழைத்து மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன்,இ.கா.ப., அவர்கள் ஆலோசனைகள் பல வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் பெண்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் மற்றும் அது சம்பந்தமான வழக்குகளை (POCSO) எவ்வாறு புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் மற்றும்  புலன்விசாரணை முடிந்து விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்குகளை  நீதிமன்றத்தில் விரைந்து நடத்தி முடித்து அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை எவ்வாறு பெற்றுத்தருவது என்பது குறித்தும் மற்றும்  வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் என்ன காரணத்திற்காக நிலுவையில் உள்ளன என்பதை கண்டறிந்து அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் குறித்து கூட்டங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும் கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மதுரை மாநகரில் இருந்து திருமதி.அமுதா, காவல் ஆய்வாளர், தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையம், திருமதி.சாரதா, காவல் ஆய்வாளர், டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையம், திருமதி.கீதாலட்சுமி, காவல் ஆய்வாளர், தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையம், திருமதி.கீதாரமணி, காவல் ஆய்வாளர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையம்,மற்றும் திருமதி.ஹேமாமாலா, காவல் ஆய்வாளர், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.