மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர் இ.கா.ப.முன்னிலையில் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது...
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர் .,இ.கா.ப.,முன்னிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ,அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஷெல் இந்தியா தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் ., இ.ஆ.ப.,அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் , கோவை மண்டல துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துச்சாமி .,இ.கா.ப., மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங்சாய் ,இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.


Comments (0)
Facebook Comments (0)