கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரீத்து தலைமையில் குற்ற செயல்களை தடுக்க ஆலோசனை கூட்டம்...

கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரீத்து தலைமையில் குற்ற செயல்களை தடுக்க ஆலோசனை கூட்டம்...

குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் தங்களது கடைக்கு வெளியே சாலையை நோக்கி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரீத்து கேட்டுக்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆரம்பாக்கம் கவரப்பேட்டை பாதிரிவேடு போன்ற காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு  பேசியதாவது கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது இது பாதுகாப்புக்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளிலிருந்து அனைவரையும் பாதுகாக்க வழிவகை செய்யும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது சந்தேக நபர்களின் நடமாட்டம்  குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். முதல்கட்டமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அனைத்து கடைகளும் தங்களது கடைக்கு வெளியே  அவசியம் ஒரு கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்துவது மட்டும் பாதுகாப்பான செயல் என்று கருதக்கூடாது அந்த கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என என்பதை எப்போதும் அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை கண்காணிப்பு கேமரா மூலம் குற்றச்செயல்களை தடுக்கவும் அவை நடைபெறும்போது குற்றவாளிகளை கண்டறியவும் போலீசாருக்கு பெரும் துணையாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார். இதில் வியாபாரிகள் நகைக்கடை உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உணவகங்கள் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சிவா, நிருபர்.