சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்...
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் சார்பில் மாதவரம் ரெட்டை ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டு ,150 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பணியின்போது இறந்த காவல் ஆளிநர்களுக்கு கடந்த 21.10.2021 அன்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் காவல் வீர வணக்க நாள் குறித்து அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரமாக” (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (29.10.2021) மாலை மாதவரம், GNT சாலை, ரெட்டை ஏரிக்கரையில் காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் இறந்த காவல் ஆளிநர்கள் நினைவாகவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வண்ணம் ஏரிக்கரை பகுதியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் மரக்கன்றினை நட்டு, தண்ணீர் ஊற்றினார். தொடர்ந்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் இறந்த காவல் குடும்பத்தினர் மரக்கன்றுகளை நட்டதில் மொத்தம் 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், இறந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தாரிடம் காவல் ஆணையாளர் அவர்கள் ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்து 45 மனுக்களை பெற்று, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் பிரதீப்குமார்,இ.கா.ப., (போக்குவரத்து), முனைவர் லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), இணை ஆணையாளர்கள் செந்தில்குமாரி, இ.கா.ப., (போக்குவரத்து/தெற்கு), துரைகுமார், இ.கா.ப., (வடக்கு மண்டலம்), லலிதா லஷ்மி, இ.கா.ப., (போக்குவரத்து/ வடக்கு), துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
JPR , Editor.


Comments (0)
Facebook Comments (0)