காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்...

காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்...

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 11,741  காலிப் பணியிடங்ககளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இக் காவலர் தேர்வுக்கான முதற்கட்டமாக இன்று (13.12.2020) தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப  இன்று (13.12.2020) காலை இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு சென்னையில் நடைபெற்று வரும் எழுத்து தேர்வு மையங்களில் எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி மையங்களுக்கு சென்று, பாதுகாப்பு பணிகள் மற்றும் எழுத்து தேர்வு அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கினார்.

35 தேர்வு மையங்களில், 29,981 பேர் எழுத்து தேர்வில் கலந்து கொள்கின்றனர். இதற்காக சென்னை பெருநர காவல் அதிகாரிகள் தலைமையில் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு எழுத்து தேர்வு நடைபெற்றது.