சைபர் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் திறந்து வைத்தார்...

சைபர் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் திறந்து வைத்தார்...

அரியலூர்  மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் அரியலூர்  மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. பாஸ்கரன் அவர்கள்  திறந்து வைத்தார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில்
 பொதுமக்களுக்கு  கணினி மற்றும்  செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதன் மூலம் பல சைபர் கிரைம் குற்றங்கள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு சைபர் கிரைம் காவல் நிலையத்தை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைத்துள்ளது. இதனடிப்படையில் அரியலூர்  மாவட்டத்தில் 29.04.2021   திறக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் *Bank fraud, Online cheating,Online Game Cheating,Online threatening, ஆன்லைன் பண மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கூறினார்.

மேலும் சமூக வலைதளங்களில்  அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இன்று முதல் பொது மக்களிடம் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திருமேனி,  சேகர்   முன்னிலையில் வகித்தார்கள். சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தனி பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள்.