தேனியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டிஎஸ்பி சுந்தராஜன் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...

தமிழக முழுவதும் நேற்று அக்.31 முதல் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கவும்,
இந்த ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக்கவும், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குதல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணிகளை நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தேனி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில்  பங்களா மேட்டில் உள்ள நாடார் சரஸ்வதி மேல் நிலை பள்ளியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமை வகித்தார், ஆய்வாளர் ஜெயப்பிரியா முன்னிலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த  ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியானது, 
நாடார் சரஸ்வதி மேல் நிலைப்பள்ளியில் துவங்கி, பங்களா மேடு -மதுரை ரோடு, நேரு சிலை,  இடமால் தெரு வழியாக வந்து, பேரணி மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று   இப் பேரணியில் 400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்த பேனர்களையும் ஏந்தி ஊழல் தடுப்புக்கு எதிரான முழக்கம் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி , செல்வம்.