உதவி ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு...
சென்னைபெருநகர காவல் திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் அண்ணாசாலை காவல் நிலைய சரகம் வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில் நேற்று 21.9.2021 சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களுடைய உத்தரவின் பேரில் கூடுதல் காவல் ஆணையர் தெற்கு மருத்துவர் கண்ணன் இ.கா.ப. கிழக்கு மண்டல இணை ஆணையர் ராஜேந்திரன் இ.கா.ப. அவர்கள் ஆலோசனையின் பேரில் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் பகலவன் இ.கா.ப அவர்களுடைய தலைமையில் உதவி ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர் திருவல்லிக்கேணி சரகம் மற்றும் ஆய்வாளர் சந்திரமோகன் அண்ணாசாலை காவல் நிலைய காவலர்கள் சகிதம் நேற்று முற்பகல் ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை குறித்து காவல்துறை பணிகளையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் போதை பழக்கத்திற்கு ஆட்படாமல் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை யோசித்து வருங்காலத்தில் நல்ல பொறுப்புள்ள சமுதாயத்திற்கு தலைமை ஏற்கும் இளைஞர்களை உருவாக்கும் விதமாக நேற்று விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இதில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும் விளக்க திரைச்சீலை அமைத்து விளக்கம் அளித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடி போதைக்கு அடிமையாகமாட்டோம் என்றும் வருங்கால பொறுப்புள்ள சமுதாயத்தின் அச்சாக இருப்போம் என மாணவர்களை , பிரட்நல் சாம் உதவி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் உறுதிமொழி எடுக்க வைத்து இனிதே நிறைவுற்றது.


Comments (0)
Facebook Comments (0)