கொரோனா விழிப்புணர்வு போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  துவக்கி வைத்தார்...

கொரோனா விழிப்புணர்வு போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  துவக்கி வைத்தார்...

காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு மாபெரும் கிரிக்கெட்  போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  இன்று துவக்கி வைத்தார்.   

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021ம் ஆண்டுக்கான 23வது ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வீரமாமுனிவர் விளையாட்டு மைதானத்தில் இன்று (25.12.2020) காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு போட்டி, கொரோனா விழிப்புணர்வு போட்டியாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பந்தை கிரிக்கெட் மட்டையால் அடித்து துவக்கி வைத்தார். 


    
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசும்போது, அமைதியான காமநாயக்கன்பட்டி ஊர் சார்பாக இளைஞர்பெருமக்கள் கொரோனா விழிப்புணர்வு போட்டியாக இந்த கிரிக்கெட் போட்டி நடத்துவது பாராட்டுக்குறியது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது புதுவிதமாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வந்துள்ள சூழ்நிலையில் அவற்றை எதிர்கொள்ள சிறந்த தடுப்பூசியாக கருதப்படுவது முகக்கவசம் அணிவதுதான். எனவே நாம் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை நல்ல நிலையில் முன்னேற்ற சிறந்த புத்தகங்களை படித்து தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் ஒழுக்கத்தோடு நற்பண்புகளை வளர்த்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  கூறினார்.