காவலர் குடும்பங்களின் தமிழர் திருவிழா...
காவலர் குடும்பங்களின் தமிழர் திருவிழா...
காக்கும் கடமை இருந்தாலும் எங்கள் காவலர் குடும்பங்களும் தமிழர் திருநாளை சிறப்பிப்போம் என சிறப்பாக கொண்டாடி உள்ளனர் நெல்லை மாவட்ட , மாநகர காவல் துறையினர்.
நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் வெகு விமரிசையாக பொங்கல் திருநாள் விழா கொண்டாடப்பட்டது...
திருநெல்வேலி காவல் துணை ஆணையாளர் சரவணன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா IPS, தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணா சிங் IPS கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து பரிசுகளை வழங்கினர்,
விளையாட்டு போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகளில்.. உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் , காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்..
நடன போட்டிகளில் துணை ஆணையர் சரவணன் அவர்களின் மகள்
அக் ஷரா பங்கேற்று நடனமாடினார்.
ஒவ்வொரு பண்டிகை தினங்களிலும் உறவுகளை பிரிந்து.. குடும்பங்களை மறந்து.. மழையிலும் வெயிலிலும்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு , மேடையில் மற்றவர்கள் ஆடும் போது ஏக்கத்துடன் பார்க்கும் காவலர்களின் குடும்பங்களுக்காக,
தமிழகத்தில் இவ்வளவு சிறப்பாக காவலர்களுக்காக பொங்கல் விழா நடைபெற்றது இல்லை என்ற அளவிற்கு சிறப்பாக நெல்லையில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,
ஏற்கனவே நெல்லையில் காவலர்கள் மனஅழுத்தத்தில் விடுபட சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில்..
அனைத்து காவலர்களும், அவர்களது குடும்பங்களும் மகிழ்ச்சியும் , புத்துணர்வும் பெறும் வகையில் அனைத்து உயர் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.


Comments (0)
Facebook Comments (0)