சத்தியமங்கலம் DSP சுப்பையா அவர்கள் 135 மலைவாழ் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கினார்....

சத்தியமங்கலம் DSP சுப்பையா அவர்கள் 135 மலைவாழ் குடும்பங்களுக்கு நல உதவிகள் வழங்கினார்....

கொரோனா பரவல், உலகையே உலுக்கிவருகிறது. உறைவிடத்தை இழந்து உணவுக்காகப் போராடிவரும் மக்களின் உயிரைக் காக்கும்பொருட்டு, ஈரோடு மாவட்ட காவல்துறை பல்வேறு நல உதவிகளைச் செய்துவருகிறது.

ஈரோடு ஆசனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எல்லையோர மலைக் கிராமங்களான பெஜலட்டி, அல்லாபுரம் தொட்டி, கோடம்பள்ளி தொட்டியில் சுமார் 127 குடும்பங்கள் மற்றும் தாளவாடி துப்புரவுப் பணியாளர்கள் எட்டு குடும்பங்கள் உட்பட மொத்தம் 135 குடும்பங்கள் உள்ளன. அந்தக் குடும்பத்தினருக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை, சத்தியமங்கலம் DSP .சுப்பையா அவர்கள் வழங்கினார். இந்த உதவியை, வறண்ட பூமியில் சிந்திய சிறு மழைத்துளியாய் உணர்ந்தனர் மலைக் கிராம மக்கள்.

நிகழ்ச்சியில் ஈரோடு தாளவாடி ஆய்வாளர் அன்பரசு, மாவோயிஸ்ட் சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சலீம், மாவோயிஸ்ட் தனிப்பிரிவு காவலர்கள் ராக்கி செல்வகுமார், சென்னிமலை, தாளவாடி தனிப்பிரிவு காவலர் குமார் , ஆசனுர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 
விவசாயச் சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் சுப்புராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.