தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இ.கா.ப.  கால்பந்தாட்ட போட்டியை துவக்கினார்...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இ.கா.ப.  கால்பந்தாட்ட போட்டியை துவக்கினார்...

 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இ.கா.ப.  கால்பந்தாட்ட போட்டியை துவக்கினார்...

தூத்துக்குடி தருவை மைதானத்தில் "ஸ்பிரிட்டட் யூத்ஸ்" கால்பந்தாட்ட தூத்துக்குடி கிளப்பின் பொன்விழா ஆண்டு துவக்க விழா கால்பந்தாட்ட போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன் இ.கா.ப.  தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பிரிட்டட் கால்பந்தாட்ட கிளப்பின் அடையாளமான, அதன் லோகோவை, வெளியிட்டு கால்பந்தாட்ட குழுவினர் மற்றும் கால்பந்தாட்ட வீரர்களையும் ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.

பின் கால்பந்தாட்ட வீரர்களை வாழ்த்தி, வெண்புறாவை பறக்க விட்டு கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கோல் போட்டு துவக்கி வைத்தார். பின் கால்பந்தாட்ட கிளப்பின்  நினைவாக தருவை மைதானத்தின் முன்பு மரம் நட்டார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜேசையா வில்லவராயர், மாவட்ட விளையாட்டு அதிகாரி  பேட்ரிக், கால்பந்தாட்ட கிளப் தலைவர்  பிரின்ஸ்டன் பர்னாந்து, செயலாளர்  மரின்டோ வி. ராயன், பொருளாளர் ஆரோக்கியராஜ், தாமஸ்பாலன், நிறுவனர்  ஜெயராஜ், கிளப் உறுப்பினர்கள், கால்பந்தாட்ட வீரர்கள், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர்  அன்ன ராஜ், வடபாகம் காவல் ஆய்வாளர் . அருள், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.