காக்கி ரெய்டில் சிக்கிய ‘காவல் இன்ஸ்’
சென்னை கடற்கரை ஓரம் உள்ள ஒரு ‘பாக்கம்’ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் பல மாதங்களாக நடந்து வருவதாக தகவல் வர அங்கு துணை ஆணையரின் தனிப்படை ரெய்டு சென்றார்களாம். அந்த வீட்டிற்கு கீழ் வீட்டில் சம்பந்தப்பட்ட எல்லைப் பகுதியின் தலைமை காக்கி தங்கியிருந்ததை கண்டு அதிர்ந்து போனார்களாம். சூதாட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்க மாதாமாதம் மாமூல் போனதை கண்டுபிடித்த தனிப்படை அது குறித்து உயர்காக்கிகளுக்கு ரிப்போர்ட் போட இப்போது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறதாம்.


Comments (0)
Facebook Comments (0)