நேர்மையான அதிகாரிக்கு வந்த சோதனை!
நேர்மையான அதிகாரிக்கு வந்த சோதனை!
சென்னை வேப்பேரியில் உள்ள காக்கி அலுவலகத்தில் முக்கியப் பிரிவில் பணிபுரியும், நேர்மையான பெண் அதிகாரி ஒருவர் பல சவாலான வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தலைமையிடம் நல்ல பெயர் பெற்றவர். குற்றவாளிகளைப் பிடிக்க செல்லும் போது ஏற்படும் செலவுகள், அவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து என தனது கைக்காசை போட்டு செலவு செய்ய அந்த செலவுக்கான பணத்தை புகார்தாரர் ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொண்டாராம். இது உயர்காக்கிகளுக்கு தெரியவர அந்த பணத்தை உடனே திரும்பிக் கொடுத்து விடும்படி கண்டிக்க, உடனே அந்த பெண் அதிகாரி அந்த பணத்தை தனது வங்கிக்கணக்கில் இருந்து, அந்த நபருக்கு திரும்ப கொடுக்க டென்ஷனான உயர் அதிகாரிகள் அந்த பெண் அதிகாரிக்கு கட்டாய விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம். அந்த பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.


Comments (0)
Facebook Comments (0)