தமிழகத்தில் விரைவில் நிகழவுள்ள ஐபிஎஸ் அதிரடி மாற்றங்கள்...
தமிழகத்தில் விரைவில் நிகழவுள்ள ஐபிஎஸ் அதிரடி மாற்றங்கள்...
தமிழகத்தில் விரைவில் உயர் போலீஸ் அதிகாரிகளின் அதிரடி மாற்றம் நிகழவுள்ளதாக கோட்டை வட்டாரம் பரபரப்பாக பேசிக் கொள்கிறதாம். தூத்துக்குடி கலவர விவகாரத்தில் உளவுத்துறை முற்றிலும் செயல்படாமல் போய் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதால் அப்செட்டில் உள்ள முதல்வர் முதற்கட்டமாக உளவுத்துறையை சீரமைக்க நேரடியாக களம் இறங்கியுள்ளாராம். முதல்வரின் நம்பிக்கையைப் பெற்ற தற்போது சென்னை நகர மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள முக்கிய பதவியில் உள்ள நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியை கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உளவுத்துறை தலைமையாக நியமிக்க முடிவெடுத்துள்ளாராம் முதல்வர். அதோடு உளவுத்துறையில் தற்போதுள்ள தலைமை அதிகாரியை மாற்றி விட்டு அந்த பதவிக்கு திறமையான ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்கவும் முடிவு எடுத்துள்ளார்களாம். மேலும் மாவட்ட அளவில் ரவுடிகளுக்கு ஆதரவாக உள்ள போலீஸ் அதிகாரிகளை களை எடுக்கவும் உத்தரவு பறந்துள்ளதாம்.
பத்து மூத்த அதிகாரிகளை மாற்றும் முக்கிய பைல் கோட்டையை நோக்கி நகர்ந்துள்ளதாம். விரைவில் அந்த உத்தரவு வெளியாகும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.


Comments (0)
Facebook Comments (0)