வாகன சோதனையில் துப்பாக்கி ஆயுதங்களுடன் பிரபல ரவுடி கைது...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை சோதனையிட்ட போது காரில் வந்தவர்கள் துப்பாக்கி 5 குண்டுகள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மூவரையும் கைது செய்து ஆயுதங்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தார்.

காவல்துறையினர் விசாரணையில் காரில் பயணம் செய்தது நெல்லை மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நெல்லையை சேர்ந்த வினோத்,சுரேந்தர் என்பதும் தெரிய வந்துள்ளது.

பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் மீது கொலை மற்றும் வெடிகுண்டு, அடிதடி என மொத்தம் 26 வழக்குகள் தமிழக காவல் நிலையங்களில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாகன சோதனையில் அதிரடியாய் செயல்பட்டு பிரபல ரவுடி ராஜ்குமார் மற்றும் கூட்டாளிகளை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


Comments (0)
Facebook Comments (0)