வர்த்தக சங்கங்களில் சார்பில் 10 லட்சம் மதிப்பில் 64 சிசிடிவி கேமராக்கள் ஆண்டிபட்டி டி.எஸ்.பி சீனிவாசனிடம் வழங்கினார்கள் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் உட்கோட்டத்தில் உள்ள பகுயில் 10 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேராக்கள் பொருத்த முடிவு செய்து குற்றச் சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனைத்து வர்த்தக சங்கங்களில் சார்பில் 10 லட்சம் மதிப்பில் 64 சிசிடிவி கேமராக்கள் டி.எஸ்.பி சீனிவாசனிடம் வழங்கினார்கள்.அவர்களுக்கு ஆண்டிபட்டி D.S.P சீனிவாசன் அவர்கள் நன்றி தெரிவித்தார் .ஆண்டிபட்டி உட்கோட்ட அலுவலகத்தை இயற்கை பூங்கா அமைத்து செயற்கை புல்வெளி அமைத்தார்.

தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டிபட்டி, க.விலக்கு, ராஜதானி , கண்டமனூர் , கடமலைக் குண்டு போன்ற காவல் நிலையங்களை இயற்கை எழில் கொஞ்சம் பசுமை இயற்கை சோலையாக மாற்றி மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு தனி ஆட்களை நியமித்தார் தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்தார் சீனிவாசன் D.S.P அவர்கள் மக்களோடு மக்களாக பழகி பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைப்பார். ஒரு புது விதமாகவும் தனக்கே உரிய பாணியில் செயல்பட்டார் தற்போது மேட்டூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக இடமாறுதலில் செல்வதால் ஆண்டிபட்டி பொது மக்கள் கனத்த இதயத்துடன் பிரியாவிடை கொடுத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சரவண தேய்வேந்திரன் மற்றும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.


Comments (0)
Facebook Comments (0)