சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் 47 பள்ளிகள் 6 கல்லூரிகள் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் 47 பள்ளிகள்  6 கல்லூரிகள் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,இன்று சென்னை பெருநகரிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 
ஒவ்வொரு ஆண்டும்,  ஜுன் மாதம் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினமாக ,  கடைபிடிக்கப்பட்டு வருவதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.06.2022) காலை, வேப்பேரி காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் , சுவரொட்டிகள்  மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டார்.

                                                                   DC Anna nagar C.Vijay Kumar IPS


மேலும், காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவுப்படி, மேற்படி வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் வைக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் தலைமையில், இன்று (24.06.2022) சென்னை பெருநகரில் உள்ள 47 பள்ளிகள், 6 கல்லூரிகள் மற்றும்         20 பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உடல் உபாதைகள், எதிர்கால சீரழிவு குறித்தும், மாணவ சமுதாயம் இது போன்ற கொடிய பழக்கத்திற்கு ஆளாகாமல் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் எடுத்துரைத்து பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயம் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுக்க விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.